Mohan Babu praises Suriya : soorarai pottru, Aprna Balamurali,Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Mohan Babu praises Suriya :

இந்த தலைமுறையின் டாப் ஸ்டார் நடிகர் நீங்கள்.. உங்கள் மேன்மையே நீங்கள் எவ்வளவு சிறந்த நபர் என்பதை காட்டும்” என பதிலுக்கு பாராட்டியுள்ளார்.

சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூரரைப் போற்று. இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து,

சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

வேஷ்டியை மடித்துவிட்டு விமானத்திற்கு முன்பு சூர்யா நிற்பது போன்ற இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது.

மேலும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றது.

அங்கு சத்தீஸ்கரில் உள்ள சிறப்பு விமானங்கள் பறக்கும் ஜிண்டல் விமான நிலையத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

Simbu’s Stunning Villain Look – Viral Photo

இதைத் தொடர்ந்து சென்னையில் இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது விமான நிலையம் போன்ற அரங்கம் அமைக்கப்பட்டு அதில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது இதில் சூர்யாவுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு பங்கேற்கும் காட்சிகள் படமாகி வருகிறது.

இதை குறிப்பிட்டு உங்களை போன்ற ஜாம்பவானுடன் இணைவதில் மகிழ்ச்சி என்று டிவிட்டரில் கூறினார் சூர்யா.

இதற்கு பதிலளித்த மோகன் பாபு, “இந்த தலைமுறையின் டாப் ஸ்டார் நடிகர் நீங்கள்.. உங்கள் மேன்மையே நீங்கள் எவ்வளவு சிறந்த நபர் என்பதை காட்டும்” என பதிலுக்கு பாராட்டியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.