Mohan Babu joins Soorarai Pottru : Suriya, Aparna Balamurali, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Mohan Babu joins Soorarai Pottru :

சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூரரைப் போற்று. இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து,

சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

வேஷ்டியை மடித்துவிட்டு விமானத்திற்கு முன்பு சூர்யா நிற்பது போன்ற இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது.

மேலும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றது.

தன் லேண்ட்மார்க் படத்துக்கு முன் ஜெயம் ரவி செய்த விஷயம் – வைரலாகும் செய்தி!

அங்கு சத்தீஸ்கரில் உள்ள சிறப்பு விமானங்கள் பறக்கும் ஜிண்டல் விமான நிலையத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து இன்று சென்னையில் இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது விமான நிலையம் போன்ற அரங்கம் அமைக்கப்பட்டு அதில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.