Mohammed Shami
Mohammed Shami

Mohammed Shami – இந்திய வேக பந்து வீச்சாளர் ஷமி நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார்.

இவர் இந்த போட்டியில் 3 விக்கெட்களை இந்தியாவிற்காக வீழ்த்தினார். மேலும் இதில் அவர் ஒரு புதிய சாதனையையும் படைத்து உள்ளார்.

முதல் விக்கெட்டை கைப்பற்றிய போது “அதிவேகமாக 100 விக்கெட்களை கைப்பற்றிய முதல் இந்தியர்” என்ற பெருமையை பெற்றார்.

இவர், இதுவரை 56 போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் 56 போட்டிகளில் விளையாடி 102 விக்கெட்களை கைபற்றி இருக்கிறார்.

அவரது சராசரி 25.7 ஆகும். இதற்கு முன்னர் 59 போட்டிகளில் 100 விக்கெட் எடுத்திருந்த இர்பான் பதானின் சாதனையை நியூ.,-இந்தியா இடையே நடந்த போட்டியில் எடுத்த விக்கெடின் மூலம் ஷமி தகர்த்து உள்ளார்.

அதோடு மட்டும் அல்லாமல் உலக அளவில் ஷமி 7-வது இடத்தை பிடித்து உள்ளார். ரஷித் கான் 44-வது இடத்திலும், ஸ்டார்க் 52-வது இடத்திலும் உள்ளனர்.

இது போன்று மேலும் பல சாதனைகள் ஷமி படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.