modi vs mk stalin
modi vs mk stalin

modi vs mk stalin –  சிவகங்கை: மோடி என்ன பெரிய சாதனை மோடி செய்து விட்டார்? எந்தெந்த ஊருக்கு போகிறாரோ, அந்த ஊருக்கு ஏற்ற மாதிரி கலர் கலராக கோட்டு மற்றும் கலர் கலராக தொப்பி அணிந்துகொள்வது இதுதான் மோடியின் சாதனை” என்று திமுக தலைவர் ஸ்டாலின் மோடி குறித்து விமர்சனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வருகிறார். மக்களிடம் நேரிடையாகவே சென்று அவர்களின் குறைகளை கேட்டு வந்து கொண்டிருக்கிறார்.

கூடவே அதிமுக, பாஜக கட்சிகளையும் விமர்சித்து வருகிறார் என்பது ஒரு புறம் நடைபெற்று வருகிறது.,

இந்நிலையில் நேற்று சிவகங்கை கீழடி கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார் .

அதில், ‘இப்பொழுது எதுக்கு மோடி மதுரைக்கு வந்து போகணும். இப்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவா?அடிக்கல் மட்டும் போதுமா? நிதி ஒதுக்க வேண்டாமா?இவ்வாறு பல கேள்விகளை எழுப்பினார்.

அடிக்கல் நாட்ட வருவதற்கு 2 நாள் முன்பு, ‘தேர்தலின்போது தந்த வாக்குறுதிகளை தமிழ்நாட்டுக்கு செய்தாரா? இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்’ என ஒரு பொதுக்கூட்டத்தில் சொல்லியிருந்தேன்.

ஆனால், மொடியோ வந்தார், அடிக்கல் நாட்டினார், சென்றுவிட்டார்.ஆனால் எனது கேள்விக்கு இதுவரைக்கும் பதில் சொல்லவில்லை..

பின்னர் ‘மோடி என்ன பெரிய சாதனையை செய்துவிட்டார், என்னை பொறுத்தவரையில் அவரது சாதனை என்னவென்றால், எந்தெந்த ஊருக்கு போகிறாரோ அந்த ஊருக்கு ஏத்த மாதிரி கலர் கலரா கோட்டு, கலர் கலர் தொப்பி போட்டு கொள்வது இதுதான் அவருடைய சாதனை’ என்று கூறினர்.

இவ்வாறு மோடியை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.