Modi Speech
Modi Speech

Modi Speech – 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மக்கள் தீர்ப்பை ஏற்று மதிப்பதாகவும், வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு அங்கம் எனவும்” கருத்து தெரிவித்திருக்கிறார்.

நேற்று 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிடப்பட்டன. நேற்று காலை ஓட்டு எண்ண ஆரம்பித்தவுடனேயே தேர்தல் முடிவுகள் ஓரளவு கணிக்கப்பட்டு விட்டன.

ஓட்டு எண்ண துவங்கியதும் காங்கிரஸ் பாஜகவை விட அதிக வித்தியாசத்தில் முன்னேறி சென்றது.

இதையடுத்து பாஜக அலுவலகங்களில் ஈயாட தொடங்கியது,இதற்கு மாறாக காங்கிரஸ் அலுவலகங்களில் களை கட்ட ஆரம்பித்தது.

காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

இந்நிலையில், பாஜகவிற்கு 5 மாநில தேர்தல் முடிவுகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது சம்பந்தமாக எதுவும் கருத்து தெரிவிக்காமல் பிரதமர் மோடி அமைதி காத்துவந்தார்.

இந்நிலையில், தன்னுடைய கருத்தை மோடி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில், “மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திற்கு சேவையாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி.

இந்த மாநிலங்களில் பாஜக அரசு மக்கள் நலனுக்காக அயராது உழைத்துள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் பாஜகவை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய காங்கிரசுக்கும் எனது வாழ்த்துக்கள்.

இதே போல் தெலுங்கானாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள சந்திரசேகர ராவ் கட்சிக்கும், மிசோரமில் வென்றுள்ள மிசோ தேசிய முன்னணி கட்சிக்கும் வாழ்த்துக்கள்” என பதிவிட்டிருந்தார்.

மேலும் இந்த 5மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி,’ இது மக்கள் அளித்த தீர்ப்பு, இந்த தீர்ப்பை ஏற்று மதிப்பதாகவும், வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு அங்கம்’ எனவும் தெரிவித்திருக்கிறார்.