Modi Cabinet : Prime Minister Narendra Modi led the Cabinet meeting at 5 pm this evening | Political News, Tamil nadu, Politics, BJP, Latest Political News

Modi Cabinet :

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

நாட்டின் 17வது மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில், பாஜ மட்டும் 303 இடங்களுடன் தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.,

எனவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியை தக்க வைத்தது.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று இரவு கோலாகலமாக நடந்தது.

பதவி ஏற்பு விழாவில், தொடர்ந்து 2வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.

மேலும் பிரதமர் மோடியை தொடர்ந்து 24 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 9 இணை அமைச்சர்களும், 24 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

பாஜ தேசிய தலைவரான அமித்ஷா முதல் முறையாக மத்திய அமைச்சராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

காமராஜர் ஆட்சியை மக்களுக்கு பாஜக கொடுக்கும்: மோடி பேச்சு!

இந்நிலையில் டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும் இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான தேதி முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.