லியோ படத்திலும் பயன்படுத்தப்படும் Mocobot கேமரா குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

வாரிசு திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் மாபெரும் நட்சத்திரபட்டாலங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரை தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் நிலையில் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக Mocobot எனப்படும் பிரத்தியேகமான கேமராவை படக்குழு உபயோகப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

ஏற்கனவே இந்த கேமராவில் விக்ரம் திரைப்படத்தில் எடுக்கப்பட்டிருந்த சண்டை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு இருந்த நிலையில் லோகேஷ் லியோ படத்திலும் இதனை உபயோகப்படுத்தி வருவதால் இப்படத்திலும் சண்டை காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புகளுடன் இதனை வைரலாக்கி வருகின்றனர்.