Mochai Sambar : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Mochai Sambar :

தேவையான பொருட்கள் :

உலர் மொச்சை – 100 கிராம்,
சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு – 100 கிராம்,
புளி – எலுமிச்சைப் பழ அளவு, தேங்காய்த் துருவல் – சிறிய கப்,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
தனியா – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
கறிவேப்பிலை – சிறிதளவு,
பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

1) மொச்சையை ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை குழைவாக வேகவிடவும்.

2) கடாயில் எண்ணெய் ஊற்றி தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை போட்டு வறுத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்.

உலக வில் வித்தை போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது

3) புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு, வேகவைத்த மொச்சை சேர்த்து கொதிக்கவிடவும்.

4) இதனுடன் வேகவைத்த பருப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்துக் கலந்து, மேலும் கொதிக்கவிடவும்.

5) சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.

6) சரியான மொச்சை சாம்பார் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here