YouTube video

Mobile Ration Shop in Tamilnadu : தமிழகத்தில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து இரண்டு முறை அதிமுக வெற்றி பெற்று மக்களுக்கு மகத்தான சேவையை அளித்து வருகிறது. மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெருக்கும் வகையில் உலக நாடுகளின் முதலீட்டை தமிழகத்திற்கு கவர்ந்து வருகிறார்.

இதனால் பொருளாதார மேம்படுவது மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். மேலும் இந்த கொரானா பேரிடர் காலத்தில் மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து உடனுக்குடன் அதிமுக அரசு செயலாற்றி வருகிறது.

கூட்டம் அதிகமாக உள்ள ரேஷன் கடைகளில் நெரிசலை குறைப்பதற்காக தற்போது புதிய யுத்தியை கையில் எடுத்துள்ளது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு.

அதாவது தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் நெரிசலை குறைக்க அடுத்த மாதம் முதல் நடமாடும் ரேஷன் கடைகளை நடைமுறைக்குக் கொண்டுவர இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் விலை இல்லா பொருட்கள் அடுத்த மாதம் முதல் வீடு தேடி வரும் என குறிப்பிட்டுள்ளார். இவை ரேஷன் கடைகளை மூடுவதற்காக மேற்கொள்ளப்படும் திட்டம் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக அரசின் இந்த அதிரடியான திட்டம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கல்லூரி பருவத் தேர்வுகளை ரத்து செய்தது, அரியர் தேர்வுகளை எழுத விண்ணப்பித்து இருந்தவர்கள் அனைவரும் பாஸ் என அறிவித்தது போன்ற அறிவிப்புகள் மாணவர்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஒரு ஹீரோவாக நிலை நிறுத்தியுள்ளது.

அதேபோல் வேலைதேடும் இளைஞர்கள் வீட்டிலிருந்தே எங்கெங்கு வேலை வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளும் வகையிலும், அந்த வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் வகையிலும் பிரத்யேகமாக இணையதளம் ஒன்றை தமிழக அரசு வடிவமைத்து இருப்பதும் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இதுபோன்று அதிமுக அரசு தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவது மக்களிடையே நன்மதிப்பையும் பாராட்டுகளயும் பெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ள இந்த நடமாடும் ரேஷன் கடை திட்டமும் மக்களிடையே அமோக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.