MNM Candidates list
MNM Candidates list

MNM Candidates list – சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு காலம் ஆன நிலையில் முதலாவதாக சந்திக்கும் தேர்தல் இதுவாகும். இதில் கமல்ஹாசன் போட்டியிடுவேன் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை நாளை மறுநாள் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிடுகிறார்.

மேலும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை மறுநாள் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது குறி்பிடத்தக்கது..

இந்நிலையில் கமல்ஹாசன் தலைமையில் தேர்தல் பணிக்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது.

மேலும் இன்றும் நாளையும் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது என அக்கட்சி தெரிவித்துள்ளது.

எனவே நாளை மறுநாள் (20.03.19) மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் ராமநாதபுரம், திருப்பூர், தென் சென்னைஆகிய தொகுதிகளில் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.