MK Stalin vs EPS
MK Stalin vs EPS

MK Stalin vs EPS – தருமபுரி: பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் தெரிவித்து உள்ளார்.

தர்மபுரி நல்லம்பள்ள

பகுதியில் அன்புமணி ராமதாஸ்- உடன் இணைந்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிச்சாமி பேசியதாவது: இந்தியாவிற்கு வலிமை மிக்க, திறமைமிக்க, வீரமிக்க பிரதமர் வரவேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு பிரதமர் வரவேண்டும் என்றால் உங்கள் பொன்னான வாக்குகளை மாம்பழம் சின்னத்தில் பதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

மேலும் கடந்த காலங்களில் திமுக சுமார் 15 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதிலும், தமிழகத்திற்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்று கூறினார்.

மேலும் தமிழகத்திற்கு புதிய திட்டங்களை கொண்டு வந்தார்களா? புதிய தொழிற்சாலைகளை கொண்டு வந்தார்களா? என கேள்வி எழுப்பினார்.

நீங்கள் ஓட்டு போட்டு அவர்களை தேர்ந்தெடுத்ததற்கு அவர்கள் குடும்பத்தை தான் வளப்படுத்திக் கொண்டார்களே தவிர,உங்களுக்கு எதுவும் செய்யவில்லை.

எனவே நடைபெறுகிற தேர்தல் மூலமாக, எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்து, அதன் மூலமாக தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள், நிதிகள் அமைத்து, தமிழகம் வளர்ச்சி அடையும் என தெரிவித்தார்.

ராமதாஸ் குறித்து பேசுகையில்: அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்தவர். இந்த முறையும் அவர் மத்திய அமைச்சராக வருவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என கூறினார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், எடப்பாடி பழனிச்சாமிக்கு மணி அடிக்கிறார் என்று ஸ்டாலின் சேலம் கூட்டத்தில், பேசியுள்ளதை கண்டித்து அதற்கு பதில் அளிக்கையில், “இது எவ்வளவு மோசமான வார்த்தை.

ராமதாஸின் வயதென்ன, அனுபவம் என்ன?ஒவ்வொரு கட்சி தலைவருக்கும் மரியாதை தரப்பட வேண்டும். அவரது வயதுக்கு மரியாதை தரவேண்டும்.

ஆனால் இதெல்லாம் அவர்களுக்கு தெரியாது. உங்களுக்கு எவ்வளவு அகங்காரமும், திமிரும் இருந்தால் இப்படி பேசுகிறீர்கள்? இந்த திமிர் அத்தனையையும், இந்த தேர்தல் மூலமாக உடைத்தெறியப்பட வேண்டும் என பதில் அளித்தார்.