MK Stalin
MK Stalin

MK Stalin :

ஆளுங்கட்சியினர் தேர்தலில் கோடிகோடியாய் பணம் கொடுத்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது, மேலும் மக்கள் அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டர்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் திமுக கட்சியாளர் கனிமொழியின் இல்லத்தில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.

சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனையில் எந்தவித ஆவணமும் கிடைக்கவில்லை.எனவே வருமானவரித்துறை அதிகாரிகள் வெறுங்கையுடன் திரும்பி சென்றனர்.

இந்நிலையில் இவ்வாறு சோதனை செய்ததை எதிர்த்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் நேற்று பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “ஆளுங்கட்சியினர் வரும் தேர்தலில் கோடிகோடியாய் பணம் கொடுத்தாலும் மக்கள் அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டர்கள்.

மத்தியில் உள்ள ஆட்சியையும் மாநிலத்தில் உள்ள ஆட்சியையும் அகற்ற மக்கள் உறுதி பூண்டுள்ளனர்” என தெரிவித்தார்.

மேலும் எவ்வளவு பணம் கொடுத்தாலும் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறாது. வருமானவரி அதிகாரிகளின் சோதனை என்ற மிரட்டலுக்கெல்லாம் திமுக ஒருபோதும் அஞ்சாது.

நியாயமாக பார்த்தால் தேனி மக்களவைத் தொகுதி தேர்தலை தான் ரத்து செய்ய வேண்டும்.

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக சட்ட வல்லுனர்களிடம் கலந்தாலோசித்து திமுக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here