MK Stalin slams PMK and AIADMK
MK Stalin slams PMK and AIADMK

MK Stalin slams PMK and AIADMK – திருவள்ளூர் : திருவள்ளூர் மக்களவைத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்தபோது,பாஜக மற்றும் அதிமுக ஆகிய 2கட்சிகளை மக்கள் வெளியேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அவேசமாக பேசியுள்ளார்.

திருவள்ளூர் மக்களவைத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்., மற்றும் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக ஸ்டாலின் பரப்புரையாற்றினார்.

பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியதாவது, ‘மத்தியில் ஆளும் பாஜக அரசையும் மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசையும் மக்கள் வெளியேற்ற வேண்டும். பிரதமர் மோடியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் ஒரே நேரத்தில் வீட்டுக்கு அனுப்ப நடத்தப்படும் தேர்தல் இது’ என்று கூறினார்.

முன்னதாக, மத்தியில் காங்கிரசும், திமுகவும் கைகோர்த்து ஆட்சி செய்த போது தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் வந்தன.

ஆனால், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்னென்ன திட்டங்களை எல்லாம் தமிழகத்துக்கு கொண்டு வந்தார்? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர், நீட் தேர்விலிருந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் விலக்கு பெற முடிந்ததா? நீட் தேர்வை ரத்து செய்யுமாறு 2 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டும் எடப்பாடியால் பிரதமரிடம் வலியுறுத்த முடியவில்லை.

நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது எல்லாம் ஏமாற்று வேலை என கூறினார்.

மேலும் கஜா புயலால் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டவுடன் நான் நேரில் சென்று பார்வையிட்டேன்.

ஆனால் கஜா புயல் பாதித்து 10 நாட்களுக்கு பிறகு தான் எடப்பாடி அங்கு சென்றார்.

அதிலும் ஹாலிகாப்ட்டரில் சென்ற முதல்வர் பாதிப்பை முழுமையாக பார்க்காமல் திரும்பினார்.

கஜா புயலில் உயிரிழந்தோரின் இரங்கல் கூட நாட்டின் முதல்வர் தெரிவிக்கவில்லை என முதல்வர் எடப்பாடி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here