MK.Stalin Request : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, Tamil nadu Political News

MK.Stalin Request :

சென்னை: தமிழின் தொன்மை குறித்த பிரதமரின் கருத்துகளை உளமார வரவேற்றுப் பாராட்டுகிறோம் என தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடியை தமிழை ஆட்சிமொழியாக அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

முன்னதாக பிரதமர் மோடிக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளித்த தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “சென்னைக்கு வரும்போதெல்லாம் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இதற்குமுன் அமெரிக்காவில் பேசும் போது, ‘தமிழ் மொழி தான் உலகத்திலே மிக பழமையான மொழி’ என்பதை அங்கு தெரிவித்தேன். தற்போது அமெரிக்க ஊடகங்கள் அனைத்திலும் அந்த செய்தி தான் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்களையும், பட்டம் பெற்ற 2140 மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கினார்.

3-வது முறையாக இணையும் மெகா ஹிட் கூட்டணி – தலைவர்168 இயக்குனர் அப்டேட்.!

பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலகின் மூத்த மொழியான தமிழ் பேசும் மாநிலத்தில் நாம் இருக்கிறோம் என்று கூறினார்.

இவ்வாறு பிரதமர் மோடி தமிழ் குறித்து பேசியதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், “இந்தியாவின் ஆட்சிமொழியாக தமிழை அறிவித்து தமிழர்களை பெருமைப்படுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் தமிழ் மொழி மீது காட்டும் ஆக்கபூர்வமான அக்கறையை நடைமுறை செயலகத்துக்கு கொண்டு வர வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் மொழி தமிழ். அத்தகைய தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு, பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு நிச்சயமாக இருக்கிறது..

எனவே இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள் என்று பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.