MK Stalin Health Status

திமுக தலைவர் ஸ்டாலின் உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

MK Stalin Health Status : தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்து வருபவர் ஸ்டாலின். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுகவின் தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி வருகிறார்.

நாளுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டு ஆளும் அதிமுக ஆட்சியை குறை சொல்லி வருவதை திமுகவும், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளார்.

நான் தன்னுடைய கட்சிக்குள் நடக்கும் பிரச்சனைகள் குறித்து ஒரு நாளும் இவர் கண்டு கொண்டதாக தெரியவில்லை. சமீபத்தில்கூட வேலூரில் திமுக துணை தலைவர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகனும் எம்பியுமான கதிர் ஆனந்த் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தபோது அவர்களை கடந்து செல்ல முயன்ற போலீசார் சுற்றி வளைத்து திமுகவினர் வம்பிழுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இவர் கொளத்தூரில் நடந்த திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது திடீரென மயக்கமடைந்ததால் அங்கியிருந்த கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதன் பின்னர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஸ்டாலினை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிளட் ப்ரஷர் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் திமுக தொண்டர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

மேலும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தன்னுடைய உடல்நிலையை கவனிக்கவே நேரமில்லாத நிலையில் ஸ்டாலின் எப்படி தமிழகத்தை கட்டிக் காப்பார்? முதலில் நன்கு ஓய்வெடுத்து உடல்நலத்தை தேற்றட்டும் என கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.