Mithran Movie Pooja : Vijayakanth Bless the Movie Team | Kollywood Cinema News | Tamil cinema News | Trending Cinema News | Mithran Movie Pooja Stills
மகனின் படத்திற்கு கிளாப் அடித்து ஆசிர்வாதம் செய்து தொடங்கி வைத்துள்ளார் கேப்டன் விஜயகாந்த்.

Mithran Movie Pooja : தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் கேப்டன் விஜயகாந்த், நடிகராக மட்டுமில்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவருடைய இளைய மகன் சண்முக பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களை தொடர்ந்து மித்ரன் என்ற தலைப்பில் உருவாகும் போலீஸ் கதையில் நடிக்கிறார்.

சிறுத்தை சிவாவின் உதவி இயக்குனரான பூபாலன் இப்படத்தை இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கியது.

தேவர் மகன் படத்துக்கும் ஜெயம் ரவி படத்துக்கும் இப்படியொரு தொடர்பா?

இந்த படப்பிடிப்பின் பூஜையில் கேப்டன் விஜயகாந்த் கலந்து கொண்டு ஆக்ஷன் என கூறி கிளாப் அடித்து படபிடிப்பை தொடங்கி வைத்துள்ளார்.

ஷண்முகப்பாண்டியனும் அப்பாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு அதன் பின்னர் நடிக்க தொடங்கியுள்ளார்.

மேலும் விஜயகாந்த் இந்த படப்பிடிப்பு பூஜையில் கலந்து கொள்வதற்கு முன்பாக காஞ்சி அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளார்.

Mithran Movie Pooja

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.