தமிழ் சினிமாவிற்கு வந்த வேகத்தில் காணாமல் போன கொண்டது நடிகர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

Missed Tamil Cinema Actors : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல புதிய நடிகர் நடிகைகள் அறிமுகமாகி கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களிடம் நல்ல திறமையும் வாய்ப்பும் தமிழ் தாய் சிறந்த நடிகர்களாக ஜெயித்து விடலாம்.

சம்பவம் தெரியுமா? உயிரை பணையம் வைத்து, பயணிகளை காப்பாற்றிய கிரேட் டிரைவர்..

ஆனால் அனைத்து நடிகர்களுக்கும் அப்படி அமைவதில்லை. தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்து அடுத்து ஆள் அடையாளம் தெரியாமல் சினிமாவை விட்டு ஓடிச் சென்ற 9 நடிகர்கள் பற்றி பார்க்கலாம் வாங்க

தமிழ் சினிமாவுக்கு வந்த வேகத்தில் காணாமல் போன 9 நடிகர்கள் - இதுல யாரு உங்க ஃபேவரைட்??

1. ரவி கிருஷ்ணா : செல்வராகவன் இயக்கத்தில் செவன் ஜி ரெயின்போ காலனி என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் ரவி கிருஷ்ணா. அதன் பின்னர் சில படங்களில் மட்டுமே நடிக்க இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால் தற்போது சினிமா பக்கமே தலை காட்டுவதில்லை.

2. விக்ரம் ஆதித்யா : விசில் திரைப்படத்தின் அழகிய அசுரா என்ற பாடலுக்கு ஷெரினுடன் இணைந்து செம குத்தாட்டம் போட்டார். தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இருக்கும் இடம் தெரியாமல் ஓடி விட்டார்.

3. யோகி : அழகிய அசுரா என்ற பெயரில் வெளியான படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் இவருடைய துர்திஷ்டம் இதுவே அவருடைய கடைசி படமாக ஆகிவிட்டது.

4. மனோஜ் பாரதிராஜா : தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றவர் மனோஜ். சில படங்களில் நடித்த இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் போனதால் சினிமாவை விட்டு விலகி கொண்டார். தற்போது இவர் மாநாடு படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

5. அப்பாஸ் : காதல் தேசம் என்ற படத்தில் அறிமுகமானவர் அப்பாஸ். பெண்களின் கனவு நாயகனாக சாக்லேட் பாயாக வலம் வர தொடங்கினார். ஆனாலும் இவரும் ஒரு கட்டத்தில் சினிமாவில் ஆள் அடையாளம் தெரியாமல் போய்விட்டார்.

6. சத்யா : நடிகர் ஆர்யாவின் தம்பியான சத்யா அமர காவியம் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை.

7. சக்தி : இயக்குநர் பி வாசுவின் மகனான இவர் தொட்டால் பூ மலரும் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் சில படங்களில் நடித்த இவர் பிக்பஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோசமான விமர்சனங்களை பெற்று தற்போது வாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்.

Beast படத்தில் களமிறங்கும் 3 வில்லன்கள்! – முதல் வில்லன் யார் தெரியுமா? 

8. பரத் : காதல் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றவர் பரத். அதன்பிறகு இவர் சினிமாவில் நல்ல நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். இருப்பினும் பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் தற்போது வரை கஷ்டப்பட்டு வருகிறார்.

9. கரண் : பெரும்பாலான படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கரண். வில்லனாக நடித்தது மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்திருந்தார். இதற்கும் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால் தற்போது சினிமாவில் அடையாளம் தெரியாமல் போய்விட்டார்.