Miss You Vadivel Balaji Promo Video
Miss You Vadivel Balaji Promo Video

அச்சு அசலாக வடிவேல் பாலாஜி மாதிரியே இருவர் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கண் கலங்கி அழுது உள்ளனர்.

Miss You Vadivel Balaji Promo Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக வடிவேல் பாலாஜி. கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பல்வேறு கெட்டப்புகளில் இவர் கலக்கியுள்ளார்.

மேலும் இவர் இதே நிகழ்ச்சியின் நடுவராகவும் பங்கேற்று வந்த நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விஜய் டிவி பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

KPY Amuthavanan About Vadivel Balaji

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் மிஸ் யூ வடிவேல் பாலாஜி என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட போது ஒருவர் அச்சு அசலாக அப்படியே வடிவேல் பாலாஜி மாதிரி மிமிக்ரி செய்துள்ளார்.

அப்போது நான் உன் கூடத்தான் இருப்பேன் என கூற புகழ் கண்கலங்கி அழுதுள்ளார். அதேபோல் ரியோ ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

இதற்கான புரோமோ வீடியோ விஜய் டிவி வெளியிட சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

https://www.instagram.com/p/CFxL7HQhqGl/?igshid=14p4whftkbbwy
https://www.instagram.com/p/CFw6ho0hGA7/?igshid=128rhgrrovezo
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.