Mirabai Chanu Wins Gold
Mirabai Chanu Wins Gold

Mirabai Chanu Wins Gold – இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார்.

தாய்லாந்தில் நடைபெற்ற பளுதுாக்குதல் போட்டியில் இந்திய பளுதுாக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெற்றி பெற்றுள்ளார்.

இவர் சென்ற 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் பெற்றவர்.

அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் கைப்பற்றிய இவர், முதுகுப்பகுதி காயத்தால் அவதிப்பட்டார்.

இதனால், ஆசிய விளையாட்டு ஜகார்த்தா போட்டி, உலக சாம்பியன்ஷிப்பில் துர்க்மெனிஸ்தான் போட்டி ஆகியவற்றில் கலந்து கொள்ள முடியவில்லை.

அந்த அவதியில் இருந்து இப்பொழுது குணமடைந்த மீராபாய், தாய்லாந்தில் நடந்த இ.ஜி.ஏ.டி., கோப்பையில் பங்குப்பெற்றார். அந்த போட்டியில் 49 கி.கி., எடைப்பிரிவில் அசத்திய இவர் மேலும் கிளீன் அன்ட் ஜெர்க் 110 கி.கி., ஸ்னாட்ச் மற்றும் 82 கி.கி., பிரிவு இரண்டையும் சேர்த்து 192 கி.கி., துாக்கி தங்கத்தை தட்டிச்சென்றார்.

அதனை தொடர்ந்து வெள்ளி, வெண்கலம் முறையே ஜப்பானின் மியாகி 183 கி.கி., பப்புவா நியூகினியாவின் டிகா டவு 179 கி.கி., வென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here