Minister Vijay Bhaskar : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, India, Tamil nadu Political News

Minister Vijay Bhaskar :

சென்னை: அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உடல் உறுப்பு தானம் வார விழிப்புணர்வு நிகழ்வில், உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உடல் உறுப்பு தானம் வார விழிப்புணர்வு விழாவை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

20 வயதான இளம் நடிகர் தூக்கத்திலேயே மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

மேலும் உடல் உறுப்பு தானம் செய்த 5 பேரின் குடும்பத்தினருக்கு நினைவு பரிசுகளை அமைச்சர்கள் வழங்கினர். உடல் உறுப்பு தான வார விழிப்புணர்வு விழாவை அமைச்சர்கள், விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விழாவை தொடங்கி வைத்த பின்னர் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

நானும், அமைச்சர் ஜெயக்குமாரும் உடல் உறுப்பு தானம் செய்ய ஒப்புதல் படிவம் அளித்துள்ளோம். அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும்.. உடல் உறுப்பு தானம் ஒரு மக்கள் இயக்கமாக மாறவேண்டும்” என்று கூறினார்.

முதல் உடல் உறுப்பு தானத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு முதல் உரிமை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வதில் வெளிப்படைத்தன்மை உள்ளது எனவும் கூறினார். அதை தொடர்ந்து, தமிழகத்தில் உடல் உறுப்பு தானத்தில் எந்த முறைகேடும் இல்லை எனவும், வெளிப்படைத்தன்மையுடன் நடக்கிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் உடல் உறுப்பு தானம் பெற அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் இல்லையென்றால் மட்டுமே தனியாருக்கு உறுப்புகள் தரப்படுகின்றன என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.