Minister Sengottaiyan About School Opening
Minister Sengottaiyan About School Opening

தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பது எப்போது என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

Minister Sengottaiyan About School Opening : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு 37 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்‌. தமிழகத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.

கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

தமிழக பள்ளிகளில் ஜோராக நடக்கும் மாணவர் சேர்க்கை.. இதுவரை அரசு பள்ளிகளில் மட்டும் எவ்வளவு பேர் சேர்ந்துள்ளனர் தெரியுமா?

மேலும் வைரஸ் பரவாமல் இருக்க மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. செப்டம்பர் ஒன்றான நேற்று முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் பள்ளிகள் திறப்பது எப்போது என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, தற்போதைக்கு தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு தான் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.