Minister OS Manian's convoy attacked
Minister OS Manian's convoy attacked

Minister OS Manian’s convoy attacked – நாகை: “கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் காரை அரிவாளால் தாக்கிய சம்பவம் நாகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” .

வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த நவம்பர் 15-ஆம் தேதி நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. அப்போது டெல்டா மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.

பலத்த காற்றின் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதையடுத்து நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிமுக நிர்வாகிகளுடன் சேர்ந்து புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டார்.

அச்சமயம், அப்பகுதி மக்கள் நிவாரண உதவிகள் கிடைக்காததாலும் , அரசு அதிகாரிகள் யாரும் சில பகுதிகளை பார்வையிடாததாலும் கடும் கொந்தளிப்பில் இருந்து வந்தனர்.

இதன் காரணமாக, “விழுந்தமாவடி கன்னித்தோப்புப் பகுதியில் அமைச்சர் ஓ.எஸ் மணியனின் காரை அரிவாளால் தாக்கினர்”.. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கீழையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமாரின் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரை நாகை மவட்ட காவல்துறையினர் நேற்று முன் தினம் கைது செய்தனர்.

இந்நிலையில், நேற்று மேலும் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.