Minister Kadambur Raju About Irandaam Kuthu

இரண்டாம் பத்து படத்துக்கு ஆப்பு வைக்கும் வகையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Minister Kadambur Raju About Irandaam Kuthu : தமிழ் சினிமாவில் காமெடி படங்களான ஹரஹர மஹாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து இவர் தற்போது இரண்டாம் குத்து என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் போஸ்டர்கள் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கு பாரதிராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் சந்தோஷ் விஜயகுமார் டிக் டிக் டிக் படத்தை பார்க்கும் போது உங்களுக்கு கண்கூச இல்லையா என பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் இரண்டாம் குத்து படத்திற்கு தடை விதிக்க ஆவண செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

சென்சார் போர்டு என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஆபாச காட்சிகளை நீக்க தமிழக அரசு ஆவணம் செய்யும். திரைப்படங்கள் நல்ல கருத்தை மட்டுமே போதிக்க வேண்டும் தவறான கருத்துக்களை பேச கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.