Minister CV Shanmugam
Minister CV Shanmugam

Minister CV Shanmugam – விழுப்புரம்: அதிமுக அழிந்துவிடும் என நினைத்தவர்கள் எல்லோரும் தற்போது,அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால்தான் எதிர்காலம் என்ற நிலையில் உள்ளார்கள் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக கூட்டணி அமைக்க நடந்து வரும் பேச்சுவார்த்தையில் மீண்டும் இழுபறி நீடித்து வருகிறது.

இந்தநிலையில் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியிருப்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரத்தில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

அவ்வாறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் சி.வி. சண்முகம் விழாவில் பேசுகையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவிற்கு எதிர்காலம் இல்லை, அழிந்துவிடும் என்று பலரும் நினைத்தார்கள்.

ஆனால் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் எதிர்காலம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அல்வா கொடுத்து கொன்றுவிட்டார்கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் தான் மற்ற கட்சிகளுக்கு எதிர்காலம் என்ற நிலை உருவாகி இருப்பதாகவும் இதற்கு காரணம் ஜெயலலிதாவின் ஆசி என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here