
பரபரப்பான தமிழக அரசியல் சூழல்களுக்கு இடையே வரும் ஜனவரி மாதத்தில் முதல் வாரத்தில் தமிழக சட்டபேரவை கூடுகிறது.
தமிழக சட்டபேரவை கடைசியாக கடந்த மே மாதம் 29- இல் துவங்கி ஜூலை 9- ஆம் தேதி முடிவடைந்தது. அதன் பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கூட்டத்தொடர் முடிவடைந்து 6 மாதங்கள் ஆவதற்குள் அடுத்த கூட்டத்தொடர் ஆரம்பிக்க வேண்டும் என்பது விதி.
இதன் காரணமாக, 15- வது சட்டபேரவை யின் 5 வது கூட்டத்தொடர் வரும் ஜனவரி மாதத்தில் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றி தொடங்க உள்ளார். மேலும், 5 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளது.
மேலும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு இந்த கூட்டத்தொடரில் இரங்கல் தெரிவிக்கப்படும்.
மேலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ராமசாமி படையாச்சியார் உருவப்படம் சட்டபேரவையில் திறக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இதன் படி வரும் சட்டபேரவை கூட்ட தொடரில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் சட்டபேரவையில் திறந்துவை வைக்கப்படும் என்று தெரிகிறது.
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று மூன்றாவது நீதிபதி தீர்ப்பு அளித்துள்ள இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஜனவரி மாதத்தில் பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.