
Central Minister AnanthaKumar : மத்திய அரசின் ரசாயனம், மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார்.
பாஜக கட்சியை சேர்ந்தவர். இவர் 1996- இல் இருந்து பெங்களூர் தெற்கு லோக் சபா தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார்.
அதன்பின், 6 முறை அதே தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார். ஒருமுறை கூட தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடையாத இவர் , கர்நாடக மாநில பாஜக தலைவர் ஆகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், இவர் 2 மாதங்களுக்கு முன்பு தனக்கு புற்றுநோய் உள்ளதை கண்டறிந்தார்.
புற்றுநோய்க்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்துள்ளார். மேலும் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த அனந்தகுமார், அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புற்றுநோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
அதன்பின்னர் உடல் நலன் தேறி இந்தியா வந்து , தனது பணிகளை மேற்கொண்டார். பின்னர், கடந்த அக்டோபர் மாதம் 20- ஆம் தேதி தனது சிகிச்சையை முடித்து கொண்டு பெங்களூர் திரும்பி சென்றார்.
இந்நிலையில் , சில வாரம் முன்பு மீண்டும் ஏற்பட்ட உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அவர் ஐசியு பிரிவில் இருந்ததாக கூறப்படுகிறது. ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை நலம் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று அனந்தகுமார் அவர்களுக்கு உடல்நிலை மோசமாக இருந்தது. அவருக்கு அளித்து வந்த சிகிச்சைகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில் “நேற்று இரவு , நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி அனந்தகுமார் உயிரிழந்தார்” .
மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவிற்கு, பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இன்னும் பல முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடல் ,பெங்களூர் தேசிய கல்லூரியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, கர்நாடக அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.