Mini Masala Idli

தேவையான பொருட்கள் :
இட்லிமாவு – 5 கப்,
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 3,
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்,
கடுகு — தேவையான அளவு,
உளுந்து – 1/2 ஸ்பூன்,
க. பருப்பு – 1/2 ஸ்பூன்,
முந்திரிப்பருப்பு — 8,
உப்பு – தேவையான அளவு,
கறிவேப்பிலை – சிறிது,
மல்லித்தழை – சிறிது,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :
1) மாவை சின்னச் சின்ன இட்லிகளாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பெரிய இட்லிகளை நறுக்கிக் கொள்ளவும்.
2) வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து, க. பருப்பு,
முந்திரிப்பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
3) பிறகு அதில் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, கொதிக்க விட்டு இட்லிகளைப் புரட்டி மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
4) சுவையான மினி மசாலா இட்லி
தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here