திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் தேன்மொழி பாடல் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சர்வதேச அளவில் சிறப்பான ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இவர் நடிப்பில் திரையரங்கில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வரும் வருகிறது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளர் அனிருத் நடிகர் தனுஷ் உடன் இணைந்து இசை அமைத்திருக்கிறார்.

இந்த காம்போவால் உருவான இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் சூப்பர் ஹிட் அடைத்துள்ளது. அதிலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள “தேன்மொழி” என்கின்ற தனுஷ் பாடியுள்ள பாடல் தற்போது வரை யூடியூபில் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக இப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளது. இந்த தகவலால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.