Milk Kozhukattai
Milk Kozhukattai

Milk Kozhukattai : விநாயகருக்கு மிகவும் பிடித்தது கொழுக்கொட்டை. அப்படிப்பட்ட கொழுக்கொட்டையில் பால் சேர்ந்தால் சுவைக்கு பஞ்சமே இருக்காது.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி மாவு – 1/2 கிலோ
வெல்லம் – 1 கப் நறுக்கியது
தேங்காய் துருவல் – ½ கப்
பால் – 1 கப்
உப்பு – சிறிதளவு
ஏலக்காய் – 1 ஸ்பூன்

மாவு பதம் :

பச்சரிசி மாவில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு வெது வெதுபான தண்ணீர் சிறிது சிறிதாக தெளித்து கொழுக்கொட்டை பதத்திருக்கு செய்து கொள்ள வேண்டும். அதனை சிறு சிறு உருண்டையாக செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை :

கடாயில் தண்ணீர் ஊற்றி அது கொதித்ததும் அதில் நாம் செய்து வைத்து இருந்த உருண்டை கொழுக்கொட்டையை சேர்த்து அடிபிடிக்காமல் கலந்து விட வேண்டும். கரண்டி பட்டு உருண்டை உடையாமல் பார்த்துக்கொள்ளவும்.

அந்த உருண்டைகள் வெந்த பிறகு அதில் நறுக்கிய வெல்லம் சேர்த்து கலக்க வேண்டும் வெல்லம் கரைந்ததும் அதில் ஏலக்காய் பொடி போட்டு பின் அதில் தேங்காய் துருவல் சேர்த்து கைவிடாமல் கலக்க வேண்டும்.

அடுப்பை நிறுத்திய பிறகு கொதிக்க வைத்து சூடு ஆறிய பாலை வாடி காட்டி இதனுடன்சேர்த்து ஒரு கலக்கு கலக்கி இறக்கினால் சுவையான பால் கொழுக்கொட்டை தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here