Mike Mohan About Vijay
என் படங்களை பார்த்து தான் விஜயும் அவரையே கேட்டு தேர்ந்தெடுத்தார் என பேசியுள்ளார் மைக் மோகன்.

தமிழ் சினிமாவில் மகேந்திரன் இயக்கத்தில் நெஞ்சை கிள்ளாதே படத்தின் மூலமாக அறிமுகமாகி கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, விதி, மனைவி சொல்லே மந்திரம் ஆகிய படங்களின் மூலமாக புகழின் உச்சத்திற்கு சென்றவர் மைக் மோகன்.

அப்படியான மோகன் மீது பிரபல நடிகை காதல் கொண்டு அதனை மோகனிடம் கூற அவர் மறுத்து விட்டார். இதனால் கோபமான நடிகை மோகனுக்கு எய்ட்ஸ் என வதந்தியை கிளப்பி விட அப்படியே முடங்கி போனார் மோகன்.

இந்நிலையில் மீண்டும் திரையுலகில் ரி என்ட்ரி கொடுக்க உள்ள அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் என்னுடைய படங்களில் காஸ்ட்யூம்ஸ் எல்லாம் வித்தியாசமாக இருக்கும்.

எனக்கு காஸ்ட்யூம் டிசைனராக இருப்பவர் ராஜேந்திரன். தற்போது தளபதி விஜய்க்கும் அவர் தான் காஸ்ட்யூம் டிசைனர். என்னுடைய படங்களை பார்த்து தான் விஜய் அவர் தான் வேண்டுமென ராஜேந்திரனை அழைத்ததாக கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.