Microsoft Move on TikTok
Microsoft Move on TikTok

Microsoft Move on TikTok : அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா வில் டிக் டாக் செயலி சேவையை விலைக்கு வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை அடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நானெள்ளா நடத்திய தொலைபேசி உரையாடலை தொடர்ந்து இத்தகவலை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது இந்தியாவில் பாதுகாப்பு பிரச்சனையை காரணம் காட்டி டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகள் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டது. இதைப் போன்று மற்ற நாடுகளிலும் இந்தப் பிரச்சினை வரும் என்பதை அறிந்து அமெரிக்காவில் டிக்டாக் செயலியை வாங்குவதற்கு பேச்சுவார்த்தையை தொடர மைக்ரோசாஃப்ட் தயாராகியுள்ளது.

என் பெயரை வைத்து சம்பாதித்த பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் – Tik Tok நிறுவனத்திற்கு மீரா மிதுன் எச்சரிக்கை

இதற்காக அவர்கள் டிக் டாக் சம்பந்தமாக எந்த ஒரு பிரச்சனையும் பாதுகாப்பிற்கு பங்கமும் வராது என்று அமெரிக்காவிற்கு முறையாக பொருளாதார நன்மைகளை அளிப்பதற்கு வேண்டிய உறுதியை அளித்துள்ளது.

அதன்பின்பு அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் சேவையை மைக்ரோசாஃப்ட் வாங்குவதை உள்ளிட்ட திட்டத்தை ஆராய்ந்து அதற்கான அறிவிப்பை மைக்ரோசாஃப்ட், பைட் டான்ஸ் ஆகியவை வெளியிட்டுள்ளனர்.

ஏனென்றால் பைடடான்ஸ் நிறுவனம்தான் டிக்டாக்-ன் தாய் நிறுவனமாகும் .தற்பொழுது அதனை மைக்ரோசாஃப்ட் வாங்கினால், அதன் சேவையை உலகமுழுவதும் செயல்பட நேரிடும்.

இதன் மூலம் இந்த சந்தைகளில் டிக் டாக் சேவையின் செயல்பாடு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு சொந்தமாக இருக்கும்.