metti oli Shanthi in Kannana Kanne Serial

பல வருட இடைவெளிக்குப் பிறகே புதிய சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார் மெட்டி ஒலி சாந்தி‌.

Metti Oli Shanthi in Kannana Kanne Serial : தமிழ் சின்னத்திரையிலும் ஒளிபரப்பாகி வந்த மிகவும் பிரபலமான சீரியல் மெட்டி ஒலி. இந்த சீரியல் ஒளிபரப்பாகி பல வருடம் ஆகியும் இன்றுவரை பலராலும் பேசப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது கூட இந்த சீரியல் சன் டிவியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த சீரியலில் நடித்த நடிகைகளில் ஒருவர்தான் சாந்தி. இவர் பாஷா உள்ளிட்ட படங்களில் டான்ஸராக பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் எந்த ஒரு சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்த இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கண்ணான கண்ணே சீரியலில் நடிக்க கற்றுக் கொடுத்துள்ளார்.

பல வருடங்களுக்கு பிறகு சீரியலில் மெட்டிஒலி சாந்தியை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.