Methi Kootu
Methi Kootu

Methi Kootu :

வாரம் இரு முறை கீரை வகைகளை உணவில் சேர்த்து கொண்டால் வியாதி என்பதே வராது. வெந்தய கீரையில் உள்ள சத்து உடலின் குளிர்ச்சி, சூடு ஆகியவற்றை சம நிலையில் வைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள் :

1. வெந்தயக்கீரை – 1 சிறிய கட்டு

2. பாசிப்பருப்பு, துவரம் பருப்பு – 1 கப்

3. தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்

4. சீரகம் – 1 ஸ்பூன்

5. கடுகு, உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்

6. பச்சை மிளகாய் – 2

7. எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை :

கடாயில் எண்ணெய் விட்டு ஆய்ந்த, சுத்தம் செய்த வெந்தயக்கீரையை போட்டு வதக்கி கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக துவரம் பருப்பு, பாசிப்பருபை கழுவி நன்றாக வேகா வைத்து கொள்ள வேண்டும்.

பிறகு, மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியற்றை போட்டு நன்றாக அரைத்துகொள்ள வேண்டும்.

அடுத்து, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பின் வெந்த பருப்பு போட்டு பின் அதில் வதக்கிய கீரை மற்றும் தேங்காய் சீரம் சேர்த்து அரைத்த கலவை அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொண்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

நன்றாக கொதித்து இறக்கினால் சத்தான மேத்தி கூட்டு தயார். இதை சற்று கெட்டியாகவே இறக்கி விட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here