
Mersal Vs Sarkar Collection : தளபதி விஜயின் சர்கார் படத்தின் வசூல் மெர்சல் சாதனையை முறியடித்து புதிய வசூல் சாதனை படைத்துள்ளது.
முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி என பலர் இணைந்து நடித்திருந்த படம் சர்கார்.
கடந்த தீபாவளிக்கு வெளியான இப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து இருந்தாலும் வசூலில் பேயாட்டம் ஆடியது.
சென்னையில் முதல் நாளில் மட்டுமே ரூ 2 கோடியை தாண்டி வசூல் செய்தது. வெறும் 4 நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து ரூ 100 கோடி வசூல் செய்து மிக பெரிய சாதனை படைத்தது.
இந்நிலையில் தற்போது வரை என்ன வசூல் நிலவரம் என்ற தகவல் கிடைத்துள்ளது. உலகம் முழுவதுமான வசூலை சேர்த்து இதுவரை ரூ 255 கோடி வசூல் செய்துள்ளது.
மேலும் அரபு நாடுகளில் மட்டுமே தற்போது வரை ரூ 16.43 கோடி வசூல் செய்து புதிய மைல் கல்லை தொட்டுள்ளது.
இந்த வசூல் நிலவரம் மெர்சல் படத்தின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.