Seeniyammal Patti
மெர்சல், விசுவாசம் போன்ற படங்களிலும் சீரியல்களிலும் நடித்த பாட்டியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான தல அஜித்துடன் விஸ்வாசம், தளபதி விஜயுடன் மெர்சல் மற்றும் பல படங்களிலும் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியலிலும் நடித்து வருபவர் பாட்டி சீனியம்மாள்.

இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் வெற்றிப் பயணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தாடி பாலாஜியும் ஈரோடு மஹேஷும் எதுக்கு நடிக்க வந்தீங்க என கேட்டனர்.

அதற்கு அந்த பாட்டி சாகுற காலத்துலயும் யாரையும் எதிர்பார்க்க கூடாது, நாமே சம்பாதித்து வாழனும்னு கண்ணீருடன் கூற அரங்கமே கண் கலங்கியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட பலரையும் கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.