Vijay Son in Valimai

வலிமை படத்தின் தளபதி விஜயின் ரீல் மகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mersal Vijay Son in Valimai Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருவார்கள் தல தளபதி. இவர்கள் இருவருக்கும் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மெர்சல். இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் தளபதி விஜய்யின் ரீல் மகனாக நடிக்க இருந்தவர் அக்ஷத்.

மெர்சல் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தற்போது வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளார்.

இது குறித்து அக்ஷத் அளித்த லேட்டஸ்ட் பேட்டி ஒன்றில் கூற இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மேலும் பாலிவுட் நடிகையான ஹீமா குரோஷி அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.