Mersal Record

Mersal Record : தளபதி விஜய் மாபெரும் சாதனை படைத்திருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை சம்மந்தப்பட்ட நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

சர்கார் படத்திற்கு முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியான மெர்சல் படம் உலக அளவில் மிக பெரிய சாதனைகளையும் வரவேற்பையும் பெற்று வந்தது.

தற்போது இப்படத்தின் பாடல்கள் அடங்கிய ஆல்பம் யூ ட்யூபில் 300 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதனை மெர்சல் படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியுள்ள சோனி மியூசிக் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை பார்த்த தளபதி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.