Merchants association Fasting
Merchants association Fasting

Merchants association Fasting – தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1ம் தேதி, அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜார்ஜ்டவுன் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் அனிஷ்ராஜா நிருபர்களிடம் கூறுகையில்: ‘தமிழக அரசு திடீரென 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய மாநிலம் முழுவதும் தடை விதித்து உள்ளது.

இதனால், எங்களில் 20 லட்சம் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜார்ஜ் டவுன் பகுதியை பொறுத்தவரை 1800 கடைகள் மூடப்பட்டு எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்து வருகிறோம்.

மேலும், இந்த திடீர் முடிவால், மாற்று ஏற்பாடு செய்யாமல், சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரையில் பாதிக்கப்பட்டு உள்ளோம்.

எனவே தமிழக அரசு மறு சுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க கூடாது.

நாங்கள் மறு சுழற்சி செய்கிறோம் என்கிற சான்றிதழும் அரசிடம் இருந்து பெற்றுள்ளோம்’ இவ்வாறு கூறினார்.

மேலும் கூறுகையில், தமிழக அரசு டாஸ்மாக் பார்களில் விற்கப்படும் டம்ளர்களுக்கும், வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் விற்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2022 வரை தடையில்லா உத்தரவு பிறப்பித்துள்ளனா்.

ஆனால் தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் பெரிய வியாபாரிகளுகு பிளாஸ்டிக் தடை உத்தரவு போடபடுள்ளது.

இதனால், அவர்களது குடும்பங்கள் மற்றும் தொழில் சார்ந்தவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே தமிழக அரசு உடனடியாக இந்த தடை உத்தரவை நிறுத்தி வைத்து மக்கா சோளம், பாக்கு பட்டை ஆகியற்றில் செய்யும் பொருட்களை மானிய விலையில் வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும் இவ்வாறு கேட்டு கொண்டார்.

மேலும் ‘தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகம் முழுவதும் உள்ள பிளாஸ்டிக் விற்பனையாளர்கள், தயாரிப்பார்கள் என அனைவரும் சேர்ந்து நாளை (04/01/19) ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தார்.