Mental Stress Problem : This problem can occur at a young age due to extreme stress | Health Tips | Beauty Tips | Daily Health Tips

Mental Stress Problem :

# இன்றைய சூழலில் பலரும் மன அழுத்தத்தால் மிகவும் அவதிப்படுகின்றனர். இதன் காரணமாக கண் நீர் அழுத்த நோய் ஏற்பட்டு கண்கள் பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றது.

தினமும் ஊறுகாய் வைத்து சாப்பிடும் பழக்கம் உள்ளவரா, நீங்கள்? அப்போ இதை படியுங்க…

# கண் நீர் அழுத்தம்:

உடலின் ரத்த அழுத்தம் 120/80 மி. மீ. பாதரச அளவு அழுத்தத்தைவிட அதிகரித்தால், அதை ‘உயர் ரத்த அழுத்தம்’ என்கிறோம்.

இதைப் போலவே கண்ணிலும் ஓர் அழுத்தம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இயல்பாக 10-லிருந்து 20 மி. மீ. பாதரச அழுத்தத்துக்குள் அது இருக்க வேண்டும். இதைவிட அழுத்தம் உயர்ந்தால் அதுதான் ‘கண் நீர் அழுத்த உயர்வு’ (கிளாகோமா) என்பது பெயராகும்.

# கண் நீர் அழுத்தம் பொதுவாக 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் ஏற்படும். தீவிர மன அழுத்தம் காரணமாக இளம் வயதிலேயே இந்த பிரச்சனை ஏற்படலாம்.

# கவனிக்க வேண்டியவை:

அடிக்கடி தலைவலி, பார்வையில் பிரச்சனை போன்றவை இருந்தால் உடனே கண் மருத்துவரிடம் கண் நீர் அழுத்த உயர்வு பற்றி பரிசோதித்து கொள்ள வேண்டும்.

# 40 வயதை நெருங்குபவர்கள் முக்கியமாக கண்களை கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

# ரத்த உறவில் யாருக்காவது கண் நீர் அழுத்த உயர்வு ஏற்கனவே இருந்தால் அத்தகையவர்கள் 40 வயதுக்கு முன்னரே கண்ணீர் அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

# மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். சிகிச்சையுடன் கண்காணிப்பும் அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here