Men Hockey World Cup wins India
Men Hockey World Cup wins India

Men Hockey World Cup wins India – புவனேஸ்வர் : 14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர், புவனேஸ்வரத்தில் நடைபெற்று வருகின்றது.

இதில் மந்தீப் சிங் தலைமையில் இந்திய அணி சி பிரிவில் இடம் பிடித்திருந்தது.

இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாபிரிக்காவை எதிர் கொண்டது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.

இந்திய அணியின் மந்தீப் சிங் ஆட்டத்தின் 10-வது நிமிடதில் கோல் அடித்து கணக்கை தொடங்க,

அவரை தொடர்ந்து இந்திய வீரர் மற்றொரு கோல் அடிக்க, முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று இருந்தது.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் இந்திய அணியின் ஆதிக்கமே தொடர்ந்தது, சிம்ரன் ஜித் சிங் 43 மற்றும் 46-வது நிமிடங்களில் கோல் அடிக்க இந்திய அணி 4 புள்ளிகளுடன் இருந்தது.

மேலும் தென்னாபிரிக்கா அணி அது வரையிலுமே தனது கணக்கை தொடங்கமல் இருந்தது.

இந்திய அணியின் சார்பில் ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் லலித் உபாத்யாயா ஒரு கோல் அடிக்க இந்திய அணியின் கணக்கு 5-ஆக உயர்ந்தது.