Baby

☆ பொதுவாக ஆண் குழந்தைகள் வெள்ளிக்கிழமையிலே பிறப்பது தவறானது என்பது சிலரது கருத்து. வெள்ளிக்கிழமையிலே குழந்தை பிறப்பது தவறல்ல.

☆ வெள்ளிக்கிழமை நவமி திதியில் பிறக்கின்ற குழந்தைகளின் தந்தைக்கு ஆபத்து ஏற்படுகின்ற சக்தி உண்டு. அப்படிப்பட்டவர்கள் கலங்கி விடத் தேவையில்லை அதற்கான பரிகாரங்கள் கீழே உள்ளன.

☆ பரிகாரம் 1
திருச்செந்தூருக்கு சென்று குழந்தையை திருச்செந்தூர் முருகனுக்கு தானமாக கொடுக்க வேண்டும். விலைக்கு கொடுக்க கூடாது. அப்பனே! முருகனே! இந்தக் குழந்தை வெள்ளிக்கிழமை அன்று நவமி திதியிலேயே பிறந்திருக்கின்றது. இந்தக் குழந்தையை காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு.
☆ மேலும் என் மாங்கல்யத்திற்கு, எந்தவித தவறும் நேர்ந்துவிடக் கூடாது என்று மனமுருக வேண்ட வேண்டும். அந்தக் குழந்தை வளர்ந்து திருமணமாகும் பொழுது முருகப் பெருமானிடம் சென்று தானத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் கணவனுக்கு வரும் ஆயுள் பயத்தையும் போக்கி விடலாம்.

☆ பரிகாரம் 2:
வெளியூரில் வசிக்கும் பக்தர்களால் இப்படிப்பட்ட காரியத்தை செய்ய முடியவில்லை என்றால் அந்த ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை நவமி திதியில் பிறந்து விட்டால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்கள் குல தெய்வத்தையும், அந்த முருகனையும் நீங்கள் இருக்கின்ற இடத்திலேயே மனதார வணங்கி, இந்த குழந்தையை இறைவா உன்னிடம் தானம் கொடுத்து விட்டோம். இதை காப்பாற்றி என் கணவனின் ஆயுள் நீதான் காப்பாற்ற வேண்டும், மனமுருகி வேண்ட வேண்டும்.

☆ இந்தப் பிரார்த்தனை பலிக்குமா, பலிக்காதா என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால், அது தவறு. இது நிச்சயம் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here