Memory Power Slogan

¤ குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க எந்தக் கடினமான விஷயத்தையும் எளிதில்  விளங்கிக் கொள்ளவும், விளக்கிச் சொல்லவும் வல்லவர்களாக விளங்கச் செய்யும்  ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ ஹயக்ரீவர் மந்திரங்கள் மற்றும் உபாசனை முறைகள் .

¤ பகவான் ஸ்ரீ ஹயக்ரீவர் வேத ஸ்வரூபி . அவருடைய சிஷ்யையே ஸ்ரீ சரஸ்வதி தேவி. எனவே ஸ்ரீ ஹயக்ரீவரை வழிபடுபவர்களுக்குச்  சரஸ்வதி தேவியின் அருள் தானாகவே கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

¤ ஹயக்ரீவர் ஸ்லோகத்தை, படிக்கும் பிள்ளைகள் நாள்தோறும் சொல்லி வந்தால் அவர்கள் வாக்குவன்மையில் சிறந்து விளங்குவர். கல்வி கேள்விகளில் ஞானம் பெற்று உலகை ஆளும் திறம் பெறுவர்.

¤ ஹயக்ரீவர் ஸ்லோகம்:

“ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகா க்ருதிம் ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே”

¤ பொருள்:
ஸ்படிகம் போன்று நிர்மலமானவரும் ஞான சொரூபியானவரும், எல்லா கலைகளுக்கும் ஆதாரமானவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன் என்பது இதன் பொருள்.

¤ காயத்ரீ மந்திரம்:

ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹிதந்நோ
ஹஸெள ப்ரசோதயாத்!

மாணவர்கள் படிப்பதற்கு முன்னர் 10 முறை இந்த ஸ்லோகத்தை தியானித்த பின்னர் படிக்கத் தொடங்கினால், படிக்கும் கருத்துக்கள் அனைத்தும் நன்றாக மனதில் பதிந்து நினைவாற்றலுடன் இருக்கும்.
கல்வியில் சிறந்து விளங்கி மேன்மை பெறுவர். இது ஒரு அனுபவப் பூர்வமான உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here