மெய்யழகன் படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பிரேம்குமார் இயக்கத்திலும், சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் ஸ்ரீதிவ்யா,ராஜ்கிரன், தேவதர்ஷினி, ஜெய்பிரகாஷ் போன்ற பல பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே முதல் நாளில் ஐந்து கோடியை தாண்டிய மெய்யழகன் இரண்டாம் நாளில் 7 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. வார இறுதி நாட்கள் என்பதால் வசூலில் தொடர்ந்து முன்னேற்றம் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.