மெகா பிளாக்பஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி உடன் இணைந்து பிரபல கிரிக்கெட் வீரரான ரோஹித் சர்மா நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர்களுடன் தென்னிந்திய நடிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். அதாவது “மெகா ப்ளாக் பஸ்டர்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் நடிகர் கார்த்திக், திரிஷா, ராஷ்மிகா மந்தனா, ரோஹித் சர்மா, தீபிகா படுகோனே, கவின் ஷர்மா ஆகியோர் நடிக்க உள்ளனர். இது குறித்த போஸ்டரை இப்படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் அனைவரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ரோகித் சர்மா!!… சூப்பரான அப்டேட்டை வெளியிட்ட தீபிகா படுகோனே.

சமீபத்தில் இப்படம் குறித்து நடிகை தீபிகா படுகோனே தனது சமூக வலைத்தள பக்கத்தில் இப்படத்தின் போஸ்டரை பகிர்ந்து மேலும் ஒரு சர்ப்ரைசை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். அதாவது இப்படத்தின் ட்ரெய்லர் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு முன்னரே வியாழக்கிழமையில் நடிகை ராஷ்மிகாவும் அவரின் இன்ஸ்டாவில் ஃபன் ஸ்டஃப் என்றும் மெகா ப்ளாக் பஸ்ட்ர், ட்ரைலர் ஆகிய ஹாஷ்டாக்களை பதிவிட்டிருந்தார்.

நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ரோகித் சர்மா!!… சூப்பரான அப்டேட்டை வெளியிட்ட தீபிகா படுகோனே.

இதுபோன்று பதிவுகளை நடிகர் கார்த்திக், திரிஷா, கபில் ஷர்மா ஆகியோரும் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும் இதே போல் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவும் இப்படம் குறித்து பகிர்ந்து இருப்பதால் ரசிகர்கள் இன்ப வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றனர்.