Meera Mitun Wedding Date
Meera Mitun Wedding Date

மீரா மிதுன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் திருமண தேதி என்ன என்பது குறித்தும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Meera Mitun Wedding Date : தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருபவர் மீரா மிதுன்.

சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சர்ச்சைக்குரிய பிரபலமாக மக்கள் மத்தியில் பரிச்சயமானார்.

விஜய்க்கு டயலாக் இல்ல.. விஜய் சேதுபதி வந்த பிறகு தான்?? – மாஸ்டர் படத்தில் நடந்த சுவாரஸ்யங்கள் – ரத்னகுமார் வெளியிட்ட அப்டேட்ஸ்!

சூப்பர் மாடல் எனக் கூறிக்கொள்ளும் மீரா மிதுன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

நீண்ட நாட்களாக சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருந்த இவர் சமீபத்தில் திருமண கோலத்தில் புகைப்படத்தை வெளியிட்டு விரைவில் உண்மையாக திருமண நடைபெற இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாகவும் வரும் காதலர் தினத்தன்று தங்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அதுவரை தன்னை திருமணம் செய்து கொள்ளப் போவது யார் என்பதை ரகசியமாகவே வைத்துக் கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். சாதாரண பெண்ணை போல் தற்போது இது குறித்து மகிழ்ச்சி அடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த லாக் டவுன் தன்னை ஒரு பிரபலம் என்பதை மறந்து வாழுங்கள் என தட்டி எழுப்பி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரேக்கிங் : தளபதி 65 இயக்குனர், தயாரிப்பாளர், ரிலீஸ் எப்போ? – லேட்டஸ்ட் தகவல் இதோ.!

மீரா மிதுனுக்கு இது இரண்டாவது திருமணம். ஏற்கனவே இவருக்கு திருமணமாகி இருந்தது. ஆனால் ஒரே நாளில் இவரின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது.

தற்போது மீராவைமீராவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே எழுந்துள்ளது.