Meera Video About Cheran
பிக் பாஸ் வீட்டிற்குள் சேரன் தன்னை தவறாக தொட்டதாக கூறிய மீரா மிதுன் மீண்டும் அவரை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 17-வது போட்டியாளராக உள்ளே சென்று பல்வேறு சர்ச்சையில் சிக்கியவர் மீரா மிதுன்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது சேரன் தன்னை தவறான கண்ணோட்டத்துடன் பிடித்து தள்ளியதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பின்னர் ஒரு குறும்படம் மூலமாக அவர் கூறியது பொய் என நிரூபித்தார் கமல்ஹாசன்.

இந்நிலையில் மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டு சேரன் தவறு செய்து விட்டு அதை அப்படியே மாற்றி விட்டார். எனக்கு பிக் பாஸ் வீட்டில் ஒரு ஆண் கூட ஆதரவு கொடுக்கவில்லை என கூறியுள்ளார்.

சேரனும் இரண்டு பெண்ணை பெற்றவர், என் பெயர் கெட்டு விடும் என்றெல்லாம் கூறி நாடகமாடி விட்டார். இரண்டு பெண்களை பெற்ற கமல்ஹாசனும் எனக்கு நீதி வழங்கவில்லை என கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தான் ஒரு பெண் குற்றம் சாட்டினால் அதை அப்படியே அந்த பெண் மீதே திருப்பி விடுகிறார்கள். எனக்கு இப்படி பண்ணி தான் பிரபலமாகனும்னு அவசியமில்லை.

ஒரே ஒரு போட்டோஷூட் நடத்தினாபோதும் எனவும் பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோக்கள் நெட்டிசன்களை கோபமடைய செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.