Meera Mitun Reply to Bharathiraja
Meera Mitun Reply to Bharathiraja

தன்னை எச்சரித்து அறிக்கை வெளியிட்ட பாரதிராஜாவுக்கு மீராமிதுன் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

Meera Mitun Reply to Bharathiraja : மீரா மிதுன் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் சூர்யாவை கண்டபடி விமர்சனம் செய்து வருகிறார்.

சூர்யா மற்றும் விஜய் விமர்சிப்பது மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார்.

தளபதி விஜயின் மனைவி திருமணத்திற்கு முன்னால் லண்டனில் பலருடன் தொடர்பு இருந்ததாக கூறி சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார். அதைப்போல் விஜயின் மகனின் கனடா இரவுகள் குறித்த விபரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

சூர்யாவின் மனைவி ஜோதிகா திருமணத்திற்கு முன்னர் எப்படி இருந்தார் அவருடைய கருப்பு பக்கம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். சூர்யாவை திருமணம் செய்து கொண்டு புனித மாடாக மாறிவிட்டார் என விமர்சித்திருந்தார்.

மீராவின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுகள் ரசிகர்களை பயங்கர கோபத்திற்கு உள்ளாக்கியது. இதனால் பலரும் மீராவை கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.

நடிகர் விஜய் ஒரு ரவுடி.. பணம் கொடுத்து எனக்கு எதிரா பேச வைக்கிறார் – நடிகை வெளியிட்ட சர்ச்சை வீடியோ

திரையுலக பிரபலங்கள் பலரும் மறைமுகமாகவும் நேரடியாகவும் நடிகை மீராவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜாவும் இது போன்ற தகாத செயல்களை இதோடு நிறுத்திக் கொள்ளுமாறு மீராவுக்கு எச்சரிக்கை விடுத்து நான்கு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கைக்கு மீரா தன்னுடைய பதிலை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் புகழுக்காக எதையும் செய்யவில்லை முதலில் பொறுப்பான குடிமகனாக நடந்து கொள்ளுங்கள். விஜய் மற்றும் சூர்யாவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரவுடிசம் செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறு கூறுங்கள். என்னை தவறானவளாக சமூகத்தில் சித்தரிக்காதீர்கள் என பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1292748583641337857?s=19

இன்னொரு பதிவில் அப்புறம் ஏன் சார் என்னை நம்ப வீட்டு பிள்ளை படத்திலிருந்து தூக்கனீங்க, இதற்கான சரியான விளக்கத்தை இயக்குனர் பாண்டிராஜை சொல்ல சொல்லுங்க என்று கூறியுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1292747957779828736?s=19

மீராவின் இந்த பதிவு குறித்து ரசிகர்கள் கருத்து