நிபந்தனையுடன் ஜாமினில் வெளிவந்த மீரா மிதுன் பத்திரிக்கையாளர்களை பார்த்து எதுவும் பேசாமல் காரில் வேகமாக வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

Meera Mitun Release in Jamin : தமிழ் சினிமாவில் 8தோட்டக்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மீரா மிதுன். இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் தான் சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு சுற்றி வந்தார்.

திருச்செந்தூர் சாமி தரிசனம் : கூடுதலாக 3 மணி நேரம் அனுமதி

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்றார். அதன் பின்னர் சமூக வலைதளங்களை பிரபல நடிகர்களையும் நடிகைகளையும் விமர்சனம் செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

நயன்தாரா, திரிஷா போன்ற டாப் நடிகைகள் தன்னைப் பார்த்து தன்னுடைய ஸ்டைலை காப்பி அடிப்பதாக குற்றம் சாட்டினார். விஜய் சூர்யா ரஜினி போன்ற நடிகர்கள் தன்னுடைய மார்க்கெட்டை குறைப்பதற்காக மறைமுகமாக வேலை செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

பொண்ணுங்க எங்க இருக்காங்களோ அங்க Rakshan இருப்பாரு! – கலாய்த்த நடிகை Pavithra Lakshmi 

இதையெல்லாம் தாண்டி பாடகி தீ குறித்து அவதூறாகப் பேசியது மட்டும் அல்லாமல் பட்டியல் இன மக்களை சினிமா துறையை விட்டு அடித்து விரட்ட வேண்டும் என பேசினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த அவரை தமிழக போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

பலமுறை இவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் தற்போது இவருக்கும் இவருடைய காதலர் அபிஷேக்கிற்கும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இருவரும் தினமும் சென்னை கிளை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

புழல் சிறையில் இருந்து வெளியே வந்த மீரா மிதுன் நுழைவாயிலில் இருந்த காவலாளி களிடம் தன்னுடைய அனுமதிச்சீட்டை காட்டி வெளியே வந்தார். அங்கே பத்திரிக்கையாளர்கள் கூடியிருந்தனர். பொதுவாக பத்திரிக்கையாளர்களை வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுபவர் தான் மீரா மிதுன். ஆனால் இந்த முறை எதையும் பேசாமல் வாயை மூடிக் கொண்டு காரில் ஏறி விருவிருவென கிளம்பியுள்ளார்.

மீரா மிதுன் இந்தச் செயலை நெட்டிசன்கள் பங்கமாக கிண்டலடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.