நான் சொந்த தயாரிப்பில் படம் எடுக்கிறேன் நடிக்க வாங்க என மீரா மிதுன் வைகைப்புயல் வடிவேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Meera Mitun Invite Vadivelu : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. காமெடி நாயகனான இவர் பல படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

24ம் புலிகேசி படத்தின் பிரச்சனை காரணமாக எந்த படத்திலும் நடிக்க முடியாமல் கடந்த 10 வருடங்களாக முடங்கி இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் பேட்டி ஒன்றில் என் உடம்பில் தெம்பு இருக்கு, நடிக்கவும் ஆசை இருக்கு ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை எனக் கேட்டு கண் கலங்கினார்.

இதனையடுத்து மீரா மிதுன் வெளியிட்டுள்ள வீடியோவில் யுடைய சொந்த செலவில் படம் தயாரிக்கிறேன் வாங்க என அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் உங்களின் தெனாலிராமன் பழம் பார்த்தேன் நீங்கள் ஒரு சகாப்தம் என தெரிவித்துள்ளார்.