Meera Mitun Complain of Suriya and Vijay
Meera Mitun Complain of Suriya and Vijay

விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக மீராமிதுன் பரபரப்பு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.

Meera Mitun Complain of Suriya and Vijay : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் சூர்யாவுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

அப்படத்தின் பிரமோஷனுக்காக கலந்து கொண்டபோது சூர்யாவுடன் சேர்ந்து நடிப்பது மிகவும் எளிதாக இருந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் சூர்யாவின் குடும்பமே நாடகமாடும் குடும்பம்.

நிவாரணப் பணியில் சூர்யா ரசிகர்கள் செயலைக் கண்டு சூர்யா வெளியிட்ட ஆடியோ – என்ன சொல்கிறார் பாருங்க

சூர்யாவுக்கு நடிப்பு என்பது வரவே வராது அதற்கு என்ன ஸ்பெல்லிங் எனக் கேட்பார். நான் தானா சேர்ந்த கூட்டம் ஒரு காட்சியில் அசால்ட்டாக நடித்து கொடுத்து விட்டேன் அனைவரும் கை தட்டினார்கள். ஆனால் சூர்யா ஒரு சிறிய காட்சியில் நடிக்க வேண்டுமென்றால் கூட 20 டேக் வாங்குவார் அவரை மோசமாக விமர்சித்திருந்தார்.

மீரா மிதுனின் இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் அவரை திட்டி தீர்த்து வந்தனர். இந்த நிலையில் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் தனக்கு கொலை மிரட்டல் மற்றும் கற்பழிப்பு என மிரட்டுவதாக பதிவிட்டுள்ளார்.

ஏதும் எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு சூர்யா தான் பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவை மீண்டும் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விஜய்யின் சூர்யாவையும் அவர் தொடர்ந்து விமர்சனம் செய்து பல பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1289839578438750208?s=19
https://twitter.com/meera_mitun/status/1289984555814854658?s=19
https://twitter.com/meera_mitun/status/1289996248544497664?s=19
https://twitter.com/meera_mitun/status/1289997093201784832?s=19
https://twitter.com/meera_mitun/status/1289487566291394560?s=19
https://twitter.com/meera_mitun/status/1289481138369527811?s=19
https://twitter.com/meera_mitun/status/1289484398023196672?s=19